TNPSC Thervupettagam

தேசிய ஒருமைப்பாட்டு தினம் 2026 – அக்டோபர் 20

October 24 , 2026 15 hrs 0 min 17 0
  • இந்தத் தினமானது ஆயுதப் படைகளைக் கௌரவிப்பதையும், 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-சீனா போரை நினைவுகூர்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று, சீனா NEFA (வடகிழக்கு எல்லைப்புற முகமை - தற்போது அருணாச்சலப் பிரதேசம்) மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் இந்தியா மீது தாக்குதல்களைத் தொடுத்தது இப்போரின் தொடக்கமாக அமைந்தது.
  • இந்தப் போர் முக்கியமாகக் கிழக்குத் துறை (NEFA) மற்றும் மேற்குத் துறை (அக்சாய் சின் உட்பட லடாக்) ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
  • சீனா 1962 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவித்து, பெரிய அளவிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்தது.
  • 1966 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தியின் பதவிக்காலத்தில் அமைக்கப்பட்ட தேசியக் குழு, அக்டோபர் 20-ஐ தேசிய ஒருமைப்பாட்டு தினமாக நியமித்தது.
  • இந்தத் தினமானது தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களைக் கௌரவிக்கிறது. மேலும் இது தேசிய ஒற்றுமை, தேசப்பற்று மற்றும் ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்