TNPSC Thervupettagam

தேசிய கடலோரத் திட்டம் 2.0

October 6 , 2026 5 days 84 0
  • தேசிய கடலோரத் திட்டம் (NCM) 2.0 செயலாக்க வழிகாட்டுதல்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புது தில்லியில் வெளியிட்டார்.
  • NCM 2.0 என்பது 2030–31 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும் ₹767 கோடி மதிப்பீட்டில் அங்கீகரிக்கப்பட்ட மத்திய துறை திட்டமாகும்.
  • இது 9 கடலோர மாநிலங்கள் மற்றும் 4 ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள இந்தியாவின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கியது.
  • கடலோர மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்துதல் மற்றும் நீலப் பொருளாதாரத்தை ஆதரிப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.
  • இந்த திட்டத்தில் கடலோர சூழ்நிலைமண்டல மறுசீரமைப்பு, மாசுக் கட்டுப்பாடு, பல்லுயிர் பாதுகாப்பு, நிலையான சுற்றுலா மற்றும் பாதிப்பு மதிப்பீடு ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்