மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், பணிபுரியும் தொழிலாளர்களின் வருகைப் பதிவினை எண்ணிம முறையில் பதிவு செய்யும் முறை என்பது, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மத்திய அரசினால் அமல்படுத்தப்பட உள்ளது.
2022 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி முதல் 20 அல்லது அதற்கு மேற்பட்ட பணி நபர்களைக் கொண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் ஒரு செயலியின் மூலம் வருகையைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக இரு வேலையும் முத்திரையிடப்பட்ட மற்றும் புவியிடங்காட்டி சார்ந்த குறியீடு வழங்கப்பட்ட தொழிலாளர்களின் புகைப்படங்கள் இதில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
திறன் சாராத தொழிலாளர்களை விட சற்றே அதிக ஊதியம் பெறும் துணைவர்கள் / மேற்பார்வையாளர்கள் இந்தப் பணியினை மேற்கொள்ள வேண்டும்.