இந்திய நாடானது, சூரிய மின்கல அளவுத்திருத்தத்திற்கான உலகின் ஐந்தாவது தேசிய முதன்மை தர மையத்தினை புது டெல்லியில் உள்ள CSIR - தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் திறந்து வைத்துள்ளது.
இந்த மையம் துல்லியமான ஒளிமின்னழுத்த (PV) அளவீடுகளை உறுதி செய்வதற்காக சூரிய மின்கலங்களின் அதி துல்லியமான அளவுத்திருத்தத்தை வழங்குகிறது.
இது சீரொளிக் கற்றை அடிப்படையிலான டிஃபெரன்ஷியல் ஸ்பெக்ட்ரல் ரெஸ்பான்ஸ்விட்டி (DSR) அமைப்பை அளவுத் திருத்தத்திற்காகப் பயன்படுத்துகிறது.
இந்த மையம் உலகளாவிய தரநிலைகளை பூர்த்தி செய்யும் சுமார் 0.35% என்ற குறைந்த அளவீட்டு நிச்சயமற்ற தன்மையை அடைகிறது.
இது ஜெர்மனியின் PTB (Physikalisch-Technische Bundesanstalt) உடன் இணைந்து உருவாக்கப் பட்டது.
இந்த மையமானது வெளிநாட்டுச் சூரிய சக்தி அளவுத் திருத்தத்தை இந்தியா சார்ந்து இருப்பதைக் குறைக்கிறது மற்றும் உள்நாட்டுச் சூரிய மின்னாற்றல் உற்பத்தி தொழில் துறையை ஆதரிக்கிறது.