TNPSC Thervupettagam

தேசிய டிஜிட்டல் தகவல் தொடர்பு கொள்கை (NDCP – National Digital Communication Policy) - 2018

September 28 , 2018 2465 days 1037 0
  • மத்திய அமைச்சரவையானது தேசிய டிஜிட்டல் தகவல் தொடர்பு கொள்கை 2018க்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • மேலும் இது தொலைத் தொடர்பு ஆணையத்தை டிஜிட்டல் தகவல் தொடர்பு ஆணையம் என மாற்றியமைக்கவும் அனுமதியளித்துள்ளது.
  • இந்தியாவின் டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பத் துறையின் நவீனகால தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தற்போதுள்ள தேசிய தொலைத் தொடர்பு கொள்கை 2012-ஐ (National Telecom Policy - 2012) இது மாற்றுகிறது.
  • NDCP ஆனது 5G மற்றும் கண்ணாடி இழைகள் போன்ற நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் மலிவு விலையில் நாடு முழுவதும் அதிவேக பிராட்பேண்ட் (அகலக்கற்றை இணையம்) ஊடுருவலை அதிகப்படுத்துவதன் மீது கவனம் செலுத்துகிறது.
  • இது டிஜிட்டல் தகவல் தொடர்புகளுக்கான நிலையான மற்றும் மலிவான அணுகலை உறுதி செய்வதற்காக ‘அலைவரிசைகளுக்கு உகந்த விலையை’ பின்பற்றுவதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கியது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்