TNPSC Thervupettagam

தேசிய டிஜிட்டல் தளம் – DIKSHA

July 5 , 2026 3 days 71 0
  • பள்ளிக் கல்விக்கான "ஒரே நாடு, ஒரே டிஜிட்டல் தளம்" என DIKSHA (அறிவுப் பகிர்வுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு) தளத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தீக்‌ஷா தளமானது, மத்திய கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்தின் (CIET) ஆதரவுடன் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் (NCERT) நிர்வகிக்கப்படுகிறது.
  • இது அடித்தள நிலை முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் சார்ந்த டிஜிட்டல் கற்றல் வளங்களை வழங்குகிறது. மேலும் இது கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள கல்வி வாரியங்களால் பயன்படுத்தப் படுகிறது.
  • இது NISHTHA (பள்ளித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழுமையான முன்னேற்றத்திற்கான தேசிய முன்னெடுப்பு) திட்டத்தின் மூலம் ஆசிரியர்களுக்கான பயிற்சிக்கு ஆதரவளிக்கிறது மற்றும் சுய-கற்றல் சான்றிதழ் படிப்புகளையும் வழங்குகிறது.
  • மாற்றுத்திறனாளி கற்பவர்களுக்கு அணுகலை மேம்படுத்தும் வகையில், நேரடி வசதி, தரவிறக்கம் செய்யக் கூடிய உள்ளடக்கம், DAISY-வடிவப் பொருட்கள் மற்றும் உரையிலிருந்து - பேச்சு போன்ற அம்சங்களையும் DIKSHA வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்