TNPSC Thervupettagam

தேசிய பிணவறை தரநிலைகள்

September 1 , 2026 12 days 99 0
  • பிணவறை மற்றும் பிரேதப் பரிசோதனை உள்கட்டமைப்பிற்கான தனது முதல் சீரான தேசியத் தரநிலைகளை இந்தியா இறுதி செய்துள்ளது.
  • சுகாதாரச் சேவைகள் தலைமை இயக்குநரகத்தின் (DGHS) கீழ் செயல்படும் மருத்துவ நிறுவனங்களுக்கான தேசிய சபை மூலம் மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இந்தத் தரநிலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • பிணவறைகள் தரை தளத்தில், மருத்துவக் கழிவுப் பகுதிகளிலிருந்து தள்ளி, உடல்களைக் கொண்டு செல்வதற்கு என தனி நுழைவு வாயில்களுடன் இருக்க வேண்டும்.
  • குளிர்பதனக் கிடங்கு 4°C முதல் 8°C வரை பராமரிக்கப்பட வேண்டும், மேலும் குறைந்த பட்சம் நான்கு உடல்களை வைக்கும் திறனும், அடையாளம் காண தனித்துவமான வரிசை எண்களும் இருக்க வேண்டும்.
  • மருத்துவ-சட்ட வழக்குகளின் உடல்கள் மற்ற உடல்களிலிருந்து தனியாக பாதுகாக்கப் பட வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்