TNPSC Thervupettagam

தேசிய போலியோ தடுப்பு மருந்து வழங்கீட்டுத் தினம்

March 1 , 2022 1399 days 573 0
  • 2022 ஆம் ஆண்டின்  தேசிய போலியோ தடுப்பு மருந்து வழங்கீட்டுத் தினமானது, பிப்ரவரி 27 ஆம் தேதியன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
  • இந்தியாவில் ஒவ்வொர் ஆண்டும் ஒரு தேசிய அளவிலான தடுப்பு மருந்து வழங்கீட்டுத் தினமும் தேசிய அளவிற்கு முந்தைய அளவில் இரண்டு தடுப்பு மருந்து வழங்கீட்டுத் தினங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
  • இது தீவிர போலியோ வைரசிற்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை மக்களிடையேத் தோற்றுவிக்கவும், போலியோ இல்லாத ஒரு நிலைமையை நாட்டில் நிலை பெறச் செய்யவும் மேற்கொள்ளப் படும் ஒரு முயற்சியாகும்.
  • இத்தினத்தின் போது 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசத்தின் 735 மாவட்டங்களில் 15 கோடிக்கும் அதிகமான அளவில் குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்து வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்