உலகப் பொருளாதார மன்றம் மற்றும் தேசிய நகர்ப்புற விவகாரங்களுக்கான கல்வி நிறுவனம் ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இது கூட்டாக இணைந்து வடிவமைக்கப்பட்ட நிலையான நகரங்கள் என்ற ஒரு திட்டத்திற்கு ஒத்துழைப்பு (Sustainable Cities India program) வழங்குவதற்கான ஒரு ஒப்பந்தமாகும்.
இது ஆற்றல், போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு சூழல் போன்ற துறைகளில் கார்பன் நீக்கத்திற்கான தீர்வுகளை உருவாக்குவதில் நகரங்களுக்கு உகந்த ஒரு சூழலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.