மத்திய வேளாண் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் அவர்கள் 9 மாநிலங்களில் 22 மூங்கில் உற்பத்தித் தொகுப்புகளையும் தேசிய மூங்கில் திட்ட இலச்சினையையும் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த மூங்கில் தொகுப்புகளானது மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, அசாம், நாகாலாந்து, திரிபுரா, உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட உள்ளது.
இந்த இலச்சினையின் வடிவமைப்பாளர் தெலுங்கானாவைச் சேர்ந்த சாய்ராம் கௌடி எடிகி ஆவார்.
இது 2006-07 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மத்திய அரசினால் ஆதரிக்கப்படும் ஒரு திட்டமாகும்.