மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணையமைச்சரான ஸ்ரீபத் நாயக் என்பவர் (தனிப் பொறுப்பு) தோல் நோய்களுக்கான தேசிய யுனானி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தைத் திறந்து வைத்தார்.
இந்த நிறுவனமானது ஹைதராபாத்தில் உள்ள மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து மேம்படுத்தப் பட்டதாகும்.
ஆயுஷ் ஆனது ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றை உள்ளடக்கிய 6 இந்திய மருத்துவ முறைகளை உள்ளடக்கியுள்ளது.