TNPSC Thervupettagam

நிணநீர் யானைக்கால் நோய் (யானைக்கால் நோய்) பற்றிய தேசியக் கருத்தரங்கு

November 5 , 2019 2102 days 766 0
  • “யானைக்கால் நோயை ஒழிப்பதற்காக ஒன்றிணைதல்” என்ற கருப்பொருள் கொண்ட  ஒரு தேசியக் கருத்தரங்கானது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனால் தொடங்கி வைக்கப் பட்டது.
  • மேலும் ‘2021 ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோயை ஒழிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை மீதான அழைப்பிலும்’ மத்திய அமைச்சர் கையெழுத்திட்டார்.
  • நிணநீர் யானைக்கால் நோயானது பொதுவாக யானைக்கால் நோய் என்று அழைக்கப் படுகின்றது. இது ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாகக் கருதப் படுகின்றது.
  • இது ஒரு நோய்ப் பரப்பியின் மூலம் பரவும் நோயாகும். இது ஃபிலாரியோடிடியா குடும்பத்தைச் சேர்ந்த உருளைப் புழுக்கள் என வகைப்படுத்தப்பட்ட ஒட்டுண்ணிகளின்  தொற்று காரணமாக ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்