சீக்கிய மதத்தை நிறுவியவரான குரு நானக் தேவின் 550வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், இந்திய கலாச்சார உறவுகள் மன்றமானது (Indian Council for Cultural Relations - ICCR) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சீக்கிய இளைஞர்களுக்காக ‘தாக்த் தரிசன யாத்திரையை’ ஏற்பாடு செய்யவுள்ளது.
தாக்த் தரிசன யாத்திரையானது பீகாரின் பாட்னாவில் உள்ள பாட்னா சாஹிப், பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயில் (அல்லது ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் அல்லது தர்பார் சாஹிப்) மற்றும் மகாராஷ்டிராவின் நந்தேதில் உள்ள ஹசூர் சாஹேப் ஆகிய மூன்று தாக்த்துகளை உள்ளடக்க இருக்கின்றது.
பாபா குரு நானக் தேவின் போதனைகள் மற்றும் அனைவருக்குமான நல்வாழ்வில் சீக்கிய மதத்தின் பங்களிப்பு மீதான சர்வதேச இளைஞர் கருத்தரங்கு உள்ளிட்ட இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது வகையான நிகழ்ச்சியையும் ICCR ஏற்பாடு செய்து வருகின்றது.
ICCR ஆனது இந்திய அரசின் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இது கலாச்சாரப் பரிமாற்றத்தின் மூலம் இந்தியாவின் வெளிநாட்டுக் கலாச்சார உறவுகளில் ஈடுபட்டுள்ளது.
இது சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தால் 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.