புது தில்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organization - SCO) நகர்ப்புற நிலநடுக்கம் தொடர்பான தேடல் மற்றும் மீட்பு மீதான கூட்டுப் பயிற்சியை (SCOJtEx – 2019) மத்திய உள்துறை அமைச்சர் துவங்கி வைத்தார்.
இது தேசியப் பேரிடர் மீட்புப் படை ஏற்பாடு செய்த பயிற்சியாகும்.
பேரிடர் சூழ்நிலையில் ஆயத்தத்தை மேம்படுத்துவதையும், 8 SCO உறுப்பு நாடுகளின் பங்கேற்புடன் பூகம்பத்திற்குப் பிந்தைய நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் நடைமுறைகளை அங்கீகரிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேசத் தேடல் மற்றும் மீட்பு ஆலோசனைக் குழு (International Search & Rescue Advisory Group - INSARAG) முறை மற்றும் வழிகாட்டுதல்களின்படி இந்தப் பயிற்சி நடத்தப்படும்.