கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் கால நிலை மாற்ற அமைச்சகமானது தேசிய வளங்கள் செயல்திறன் கொள்கை 2019ற்கான ஒரு வரைவைப் பரிந்துரைத்துள்ளது.
இது சுற்றுச்சூழலில் குறைந்தபட்ச அளவிலான எதிர்மறைத் தாக்கத்துடன் இந்த வளங்களின் திறமையான பயன்பாட்டை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கொள்கையானது கிடைக்கக் கூடிய பொருட்களின் வளங்கள், 6R கொள்கைகளின் அடிப்படை ஆகியவற்றின் திறமையான பயன்பாட்டின் மூலம் “சுழல் பொருளாதாரத்தை” அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
6R என்பது குறைத்தல், மறு பயன்பாடு, மறு சுழற்சி, மறு வடிவமைப்பு, மறு உற்பத்தி மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றைக் குறிக்கும்.
சுழிய நில நிரப்பல் அணுகுமுறை - அதிக அளவில் கழிவுகளை உற்பத்தி செய்வோரின் மீது “நில நிரப்பல் வரி” விதிக்கப் படுகின்றது. இதன் மூலம் அவர்கள் பொருள்களின் உகந்த பயன்பாடு மற்றும் சிறந்த கழிவு மேலாண்மை ஆகியவற்றை நோக்கி நகர்வார்கள்.