இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகமானது தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்தது.
2025 ஆம் ஆண்டிற்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு எந்த வீரரும் / வீராங்கனையும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
விதித் குஜராத்தி மற்றும் திவ்யா தேஷ்முக் (செஸ்), தேஜஸ்வின் சங்கர் (தடகளம்), காயத்ரி கோபிசந்த் மற்றும் ட்ரீசா ஜாலி (பேட்மிண்டன்) உள்ளிட்ட 17 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
முன்னாள் கால்பந்து வீரரும் பயிற்சியாளருமான ஐ. அருமைநாயகம் அர்ஜுனா விருதினை (வாழ்நாள்) பெற்றார்.
பர்பீர் சிங் (தடகளம்), சோட்டே லால் யாதவ் (குத்துச்சண்டை), நேஹா நந்தகுமார் சவான் (துப்பாக்கிச் சுடுதல்), தர்மேந்திர சிங் யாதவ் (குத்துச்சண்டை), மற்றும் வீரேந்தர் குமார் (மல்யுத்தம்) ஆகியோருக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப் பட்டது.
விளையாட்டை மேம்படுத்தியதற்காக புனேவில் உள்ள ராணுவ பாராலிம்பிக் நோட் அமைப்பு (Army Paralympic Node), ராஷ்ட்ரிய கேல் புரோட்சஹான் புரஸ்கார் விருதைப் பெற்றது.