தேர்தல் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தம் – பீகார்
June 30 , 2025 2 days 5 0
இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஆனது, பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் ஒரு முனைப்பான சிறப்பு திருத்தம் (SIR) ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.
வீடு வீடாகச் சென்று சரி பார்ப்பு, வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் (BLO) மூலம் இது மேற்கொள்ளப்படும்.
தகுதியுள்ள அனைத்துக் குடிமக்களையும் சேர்த்து, தகுதியற்ற அல்லது போலியான உள்ளீடுகளை அகற்றுவதே இதன் நோக்கமாகும்.
பீகாரில் கடைசியாக முனைப்பான ஒரு திருத்தம் ஆனது 2003 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.
இந்தத் திருத்தமானது நகரமயமாக்கல், புலம் பெயர்வு மற்றும் பதிவு செய்யப்படாத உயிரிழப்புகள் போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்கிறது.
1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 326 மற்றும் 16வது பிரிவுகளின் கீழ் கடுமையான சட்ட விதிகள் பின்பற்றப்படும்.
வாக்காளர் சரிபார்ப்புக்குப் பயன்படுத்தப் படும் ஆவணங்கள் ஆனது அங்கீகரிக்கப் பட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியப் படுத்தும் வகையில் ECINET தளத்தில் இது பாதுகாப்பாக பதிவேற்றப் படும்.