இந்திய உச்சநீதிமன்றமானது அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் பெற்ற தேர்தல் பத்திரங்கள் விவரங்களை மூடிய உரையில் வைத்து தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
மேலும் தகவல்களுக்கு இந்த இணைப்பைப் பயன்படுத்தவும் https://www.tnpscthervupettagam.com/sbi-to-issue-and-encash-electoral-bonds/
குறைகள்
தேர்தல் பத்திரங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளன. ஏனெனில் தேர்தல் பத்திரங்களை வாங்கும் தனிநபர்கள் அதனை பொதுத் தளத்தில் வெளிப்படுத்துவதற்கு குறைந்த வாய்ப்புகளே உள்ளன.
தேர்தல் பத்திரங்களானது தேர்தல் நிதியுதவி வழங்குதலை மிகவும் சிக்கலாக மாற்றுகின்றது. இது அரசியல் துறையில் மிக அதிக அளவிலான கறுப்புப் பணத்தை உள்ளே கொண்டு வரும்.
நிறுவனங்கள் வரி விதிக்காத நாடுகளில் பதுக்கி வைத்துள்ள தங்களது கறுப்புப் பணத்தை மீண்டும் அதை அரசியல் கட்சிக்கு கொடுப்பதற்கு ஒரு சட்டவழிப் பாதையாக இதைப் பயன்படுத்துகின்றன.
தேர்தல் பத்திரங்கள் நிறுவன நன்கொடைகளின் மீது அதிகபட்சமான5 சதவிகித உச்ச வரம்பை ஒழிக்கிறது. அதாவது இழப்பு ஏற்படுத்தும் நிறுவனங்கள் வரம்பற்ற நன்கொடைகளை அளிக்க முடியும்.