TNPSC Thervupettagam

தேர்ந்தெடுக்கப்பட்ட நீண்ட கால பிரதமர் - நரேந்திர மோடி

June 12 , 2026 2 days 71 0
  • 2026 ஆம் ஆண்டு ஜூன் 10 அன்று தொடர்ந்து நீண்ட காலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பணியாற்றியவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.
  • ஜவஹர்லால் நேருவின் 4,398 தொடர்ச்சியான தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களின் சாதனையை முறியடித்து, 2014 ஆம் ஆண்டு மே 26 அன்று பதவியேற்றதிலிருந்து தொடர்ச்சியாக 4,399 நாட்களை மோடி நிறைவு செய்துள்ளார்.
  • பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு, நேரு 1952 ஆம் ஆண்டு மே 13 முதல் 1964 ஆம் ஆண்டு மே 27 வரை தொடர்ந்து பணியாற்றினார்; அவரது 1947-1952 ஆம் ஆண்டு பதவிக்காலம் ஆனது, தேர்தல் அமைப்புகள் முழுமையாக நிறுவப்படுவதற்கு முந்தையதாகும்.
  • தொடர்ச்சியாக இரண்டு முழுப் பெரும்பான்மை கொண்ட பதவிக்காலங்களை நிறைவு செய்த முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் மற்றும் பதவியிலிருக்கும் போதே தொடர்ந்து மூன்று மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற நேருவுக்கு அடுத்த இரண்டாவது பிரதமர் மோடியாவார்.
  • 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், இந்திரா காந்தியின் தடையற்ற பதவிக்கால சாதனையான 4,077 நாட்களை மோடி முறியடித்தார்; 1966 ஆம் ஆண்டு ஜனவரி 24 முதல் 1977 ஆம் ஆண்டு மார்ச் 24 வரை தொடர்ந்து இந்திரா பணியாற்றினார்.
  • 2026 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று, குஜராத் முதல்வர் மற்றும் பிரதமர் என இரண்டிலும் சேர்த்து 8,931 நாட்களை நிறைவு செய்து, பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை முறியடித்து இந்தியாவின் நீண்ட காலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத் தலைவராக மோடி ஆனார்.
  • 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 1964 ஆம் ஆண்டு மே 27 வரை மொத்தம் 6,131 நாட்கள் பதவிக்காலத்துடன், ஜவஹர்லால் நேரு ஒட்டு மொத்தமாக இந்தியாவின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பிரதமராகத் தொடர்கிறார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்