பெங்களூருவில் உள்ள இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள இந்திய அறிவியலாளர்கள் குவாண்டம் இயல்புகளைப் பயன்படுத்தி முழு தொடர்பில்லா (ரேண்டம்) எண்களை உருவாக்குவதற்கான ஒரு நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இவற்றைப் படிமுறை தீர்வுகளால் கணிக்கவோ அல்லது நகலெடுக்கவோ முடியாது என்பதால், முழு ரேண்டம் எண்கள் டிஜிட்டல் பாதுகாப்பிற்கு அவசியமானவை.
தற்போதைய அமைப்புகள் ஆனது படிமுறை தீர்வுகளால் உருவாக்கப்படுகின்ற மற்றும் குவாண்டம் கணினி தாக்குதல்களுக்கு ஆளாகக் கூடிய போலி ரேண்டம் எண்களைப் பயன்படுத்துகின்றன.
அளவீட்டின் போது ஃபோட்டான் நிலைகள் போன்ற இயல்பாகவே கணிக்க முடியாத துகள் நடத்தைகளிலிருந்து குவாண்டம் ரேண்டம் (தொடர்பில்லா) தன்மை உருவாகிறது.