TNPSC Thervupettagam

தொலைக்காட்சி மதிப்பீட்டு முறையை மதிப்பாய்வு செய்வதற்கான குழு

November 6 , 2020 1710 days 625 0
  • தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமானது தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனங்களின் தற்போதைய வழிகாட்டுதல்களை மறு ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்கவுள்ளது.
  • பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரியான சஷி சேகர் வேம்பதி என்பவரது தலைமையில் நான்கு உறுப்பினர்களுடன் இந்தக் குழு அமைக்கப் பட்டுள்ளது.
  • குழுவில் உள்ள மற்ற இதர மூன்று உறுப்பினர்கள்,
    • ராஜ்குமார் உபாத்யாயா (சி-டாட்டின் நிர்வாக இயக்குநர்),
    • ஐ.ஐ.டி கான்பூரின் புள்ளியியல் பேராசிரியர் டாக்டர் ஷலப் மற்றும்
    • பொதுக் கொள்கைக்கான அறிவியல் முடிவுகள் மையத்தின் பேராசிரியர் புலக் கோஷ் ஆகியோர் ஆவர்.
  • டிஆர்பி என்பது ஒரு தொலைக்காட்சி மதிப்பீட்டு அளவாகும்.
  • ஒரு சேனலை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு வகை தரவு இது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்