TNPSC Thervupettagam

செறிவூட்டப்பட்ட அரிசி

November 5 , 2020 1711 days 771 0
  • இந்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது, மத்திய அரசின் நிதியுதவியோடு செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் பொது விநியோக முறை மூலம் அதன் விநியோகம் குறித்த ஒரு சோதனைத்  திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
  • இந்தத் திட்டமானது 2019-20 முதல் 2022-23 வரை மூன்று ஆண்டு காலத்திற்குச் செயல்படுத்தப்பட உள்ளது.
  • ஊட்டச்சத்துப் பாதுகாப்பை (Nutritional security) நோக்கி நாட்டைக் கொண்டுச் செல்ல இந்தத் திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப் படி, அரிசிக்கு நுண்ணூட்டச் சத்து தூள் சேர்ப்பதன் மூலம் அரிசியானது செறிவூட்டப் படுகிறது.
  • குஜராத், ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் செறிவூட்டப் பட்ட அரிசி விநியோகமானது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்