மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து ராஜஸ்தான் அரசானது மூன்று மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும் விவசாயம் மற்றும் சந்தையைச் மையப் படுத்தி இருக்கிறது. இவை அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் அடிப்படையில் மாநிலப் பட்டியலில் இருக்கின்றன.
ஆனால், பொதுப் பட்டியலின் 33 ஆவது உட்கூறானது விவசாயம் உட்பட எந்தவொரு தொழிற்துறையின் உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசிற்கும் மாநிலங்களுக்கும் அதிகாரங்களை வழங்குகிறது.
வழக்கமாக, பொதுப் பட்டியலில் உள்ள ஒரு கூறின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு மத்தியச் சட்டத்தை ஒரு மாநிலம் திருத்த விரும்பினால், அதற்கு மத்திய அரசின் அனுமதி தேவைப் படுகிறது.
ஒரு மாநிலச் சட்டம் அதே விவகாரத்த்தில் மத்தியச் சட்டத்திற்கு முரணாக இருக்கும் போது, பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம் மேலோங்கி நிற்கிறது.
அரசியலமைப்பின் பிரிவு 254 (2) பொதுப் பட்டியலின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்களில் மத்தியச் சட்டங்களை மறுக்கும் வகையில் சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.
பிரிவு 254 (2) என்பதின் கீழ் நிறைவேற்றப் பட்ட ஒரு மாநிலச் சட்டத்திற்கு இந்திய ஜனாதிபதியின் ஒப்புதல் தேவைப் படுகிறது.
மேலும் ஒரு மாநிலத்தின் அனைத்து மாநில வேளாண் சந்தைகளுக்கும் குறைந்த ஆதார விலையானது செல்லுபடியாகும் வகையில் ஒரு விதியை அந்த மாநிலத்தின் ஒரு சட்டம் கொண்டிருக்க முடியும்.