தொலை உணர்வு செயற்கைக்கோள் தரவுப் பகிர்வில் ஒத்துழைப்பு
August 21 , 2021 1549 days 792 0
BRICS நாடுகளானது (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்பிரிக்கா) தொலை உணர்வு செயற்கைக்கோள் தரவுப் பகிர்வில் ஒத்துழைப்பிற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது BRICS நாடுகளின் விண்வெளி நிறுவனங்களுடைய குறிப்பிட்ட தொலை உணர்வு செயற்கைக் கோள்களின் ஒரு மெய்நிகர் தொகுப்பினை உருவாக்கி அந்தந்த நாடுகளின் விண்வெளி மையங்கள் தரவுகளைப் பெற வழி வகுக்கும்.
இந்த BRICS ஒப்பந்தமானது, இந்தியாவின் தலைமையின் கீழ் கையெழுத்தானது.