தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) மூலம் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச வருடாந்திர சுகாதாரப் பரிசோதனைகளை வழங்க மத்திய தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இத்திட்டம் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலை நிலைமைகள் (OSH) குறியீடு, 2020 உடன் இணைக்கப்பட்டுள்ளது.
நச்சு இரசாயனங்கள் அல்லது கனரக இயந்திரங்களைக் கையாளும் தொழிலாளர்களுக்குக் கட்டாயச் சுகாதாரப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, ஏதேனும் நோய் கண்டறியப்பட்டால் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
இத்திட்டம் முக்கியமாக நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களில் கவனம் செலுத்துகிறது.
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக (ESIC) மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் இந்தச் சுகாதாரச் சேவைகளை வழங்கும்.
இந்தியா முழுவதும் தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த இ-ஷ்ராம் (e-Shram) இணையதளம் ESIC உடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.