TNPSC Thervupettagam

தொழில்முறை சேவைகள் குறித்த நிதி ஆயோக் அறிக்கை

August 20 , 2026 5 days 105 0
  • தொழில்முறை சேவைகளுக்கான இந்தியாவின் ஒழுங்குமுறைக் கட்டமைப்பு குறித்த அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டது.
  • இந்த அறிக்கை சட்டம், கணக்கியல், கட்டிடக்கலை, பொறியியல் மற்றும் சுகாதாரச் சேவைகளை உள்ளடக்கியது.
  • தொழில் வல்லுநர்களின் இயக்கம் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை பாதிக்கும் ஒழுங்குமுறை பிளவுகள் மற்றும் கட்டுப்பாடுகளை இது எடுத்துக் காட்டுகிறது.
  • 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சேவைகள் ஏற்றுமதியில் 4.3 சதவீத பங்களிப்புடன், சேவைகள் ஏற்றுமதி செய்யும் 7-வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.
  • ஒழுங்குமுறை ஒருங்கிணைப்பு, பரந்த அளவிலான பரஸ்பர அங்கீகார ஒப்பந்தங்கள் (MRAs), தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாடு (CPD) மற்றும் நவீன வணிக கட்டமைப்புகள் ஆகியவற்றை நிதி ஆயோக் பரிந்துரைக்கிறது.
  • உயர் மதிப்புமிக்க சேவைகள் ஏற்றுமதியை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI), தானியக்கமாக்கல் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பயன்படுத்தவும் இது பரிந்துரைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்