தோரியம் எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட சிறிய அணு உலைகளை (SMR) நிறுவுவதற்காக வேண்டி ROSATOM எனப்படுகின்ற ரஷ்யாவின் அரசிற்குச் சொந்தமான நிறுவனத்துடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மகாராஷ்டிரா மாநில அரசானது கையெழுத்திட்டுள்ளது.
ஒரு மாநில அரசானது அணுசக்தி துறையில் மற்றொரு நாட்டுடன் இணைவது இதுவே முதல்முறையாகும்.
முதலுறு வேக ஈணுலை (FBR) ஆனது தொடக்கத்தில் யுரேனியம்-புளூட்டோனியம் கலந்த ஆக்சைடு (MOX) எரிபொருளைப் பயன்படுத்தும்.
எரிபொருள் கருவத்தினைச் சுற்றியுள்ள யுரேனியம்-238 "படலம்" ஆனது மிகவும் அதிக எரிபொருளை உற்பத்தி செய்வதற்காக அணுசக்தி நிலைமாற்றத்திற்கு உட்படுத்தப் படுவதால் இது ‘ஈணுலை’என்ற பெயரைப் பெறுகிறது.
இந்தக் கட்டத்தில், ஒரு பிளவுப் பொருளாக அல்லாத தோரியம்-232 ஐசோடோப்பினைப் படலமாகப் பயன்படுத்துவது குறித்தும் கருத்தில் கொள்ளப்பட்டு வருகிறது.
நிலைமாற்றம் மூலம், தோரியம் ஆனது பிளவுபட்ட யுரேனியம்-233 ஐசோடோப்பினை உருவாக்கும் என்பதோடு இது உலையின் மூன்றாவது கட்டத்தில் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.