2024 YR4 சிறுகோள் ஆனது 2032 ஆம் ஆண்டில் சந்திரனுடன் மோதக்கூடும்.
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் (JWST) அவதானிப்புகளின்படி, இந்த சிறுகோள் தோராயமாக 6 மீ அகலம் கொண்டது.
வழக்கமான இயக்க விலகல் முறைகள் இந்தச் சிறுகோளை திசை திருப்ப போதுமானதாக இல்லாததால் அணுசக்தி பிளவினைப் பயன்படுத்துவது குறித்து நாசா பரிசீலித்து வருகிறது.
அணுசக்தி பயன்பாட்டிற்கான திட்டச் செயல்பாடுகள் 2029 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 2031 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை மதிப்பிடப் படுகின்றன.
அணுசக்தி பயன்பாடு மூலமான வெடிப்பு, சிறுகோளின் மேற்பரப்பின் ஓர் அடுக்கை ஆவியாக்கி, நேரடித் தொடர்பு இல்லாமல் அதன் பாதையை மாற்றும்.
சந்திரனின் மீதான இதன் தாக்கம் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில், செயற்கைக் கோள்கள் மற்றும் மனித விண்வெளி பயணங்களுக்கு அச்சுறுத்தலாக அமைகின்ற மிகவும் குறுகிய அளவிலான விண்கற்களின்/மைக்ரோமீட்டோராய்டு பாய்ச்சலை தற்காலிகமாக அதிகரிக்கக் கூடும்.