TNPSC Thervupettagam
November 6 , 2025 14 days 70 0
  • அறிவியலாளர்கள் முதன்முறையாக சூரியனின் கரோனா அடுக்கில் ஆல்ஃப்வென் அலைகளை நேரடியாகக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தக் காந்த அலைகள் சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தை வெப்பப் படுத்த தேவையான ஆற்றலில் குறைந்தது பாதியைக் கொண்டிருக்கலாம்.
  • சூரியனின் கரோனா அடுக்கின் வெப்பநிலையானது, 10,000 டிகிரி பாரன்ஹீட் (5,500 டிகிரி செல்சியஸ்) கொண்ட அதன் மேற்பரப்பை விட அதிகமாக, 2 மில்லியன் டிகிரி பாரன்ஹீட் (1.1 மில்லியன் டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை வரை எட்டுகிறது.
  • ஹவாயில் உள்ள டேனியல் K. இனூயே சூரிய தொலைநோக்கியை (DKIST) பயன்படுத்தி இந்தக் கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டது.
  • கரோனா அடுக்கில் சிவப்பு மற்றும் நீல டாப்ளர் மாற்றங்கள் ஆல்ஃப்வென் அலைகள் இருப்பதை உறுதி செய்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்