நகராட்சித் திடக்கழிவு மேலாண்மையின் சிறந்த நடைமுறைகள்
December 20 , 2021 1332 days 748 0
இது இந்திய நகரங்கள் எவ்வாறு தங்களது திடக்கழிவுகளை மேலாண்மை செய்கின்றன என்பது பற்றிய ஒரு விரிவான அறிவுக் களஞ்சியமாகும்.
இது நிதி ஆயோக் அமைப்பினால் உருவாக்கப் பட்டதாகும்.
இந்தியாவின் திடக்கழிவு மேலாண்மைத் துறையானது சில ஆண்டுகளில் ஒரு ஈடு இணையற்ற வளர்ச்சியைக் கண்டுள்ளது.
சுவச் பாரத் என்ற திட்டத்தின் இரண்டாம் கட்டமானது தூய்மை இந்தியாவிற்கான முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதற்காக வேண்டி தொடங்கப் பட்டது.
‘கழிவு வாரியான நகரங்கள் : நகராட்சி திடக்கழிவு மேலாண்மையின் சிறந்த நடைமுறைகள்’ என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கையானது இந்தியாவின் 15 மாநிலங்களில் 28 நகரங்களின் சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்துகிறது.
இந்தப் புதிய அறிக்கையானது நிதி ஆயோக் மற்றும் அறிவியல் & சுற்றுச்சூழல் மையம் ஆகியவை இணைந்து நடத்திய நாடு தழுவிய ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு குறித்த தகவல்களைக் குறிப்பிடுகிறது.