TNPSC Thervupettagam
July 28 , 2025 2 days 32 0
  • ஓரியன் விண்மீன் திரளில் உள்ள HOPS-315 எனும் புதிய நட்சத்திரத்தினைச் சுற்றி ஆரம்ப கால கிரக உருவாக்கத்தை வானியலாளர்கள் கவனித்துள்ளனர்.
  • நாசா ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மற்றும் அட்டகாமா பெரிய மில்லி மீட்டர்/துணை மில்லிமீட்டர் அரே (ALMA) நோக்குக் கூடம் ஆகியவை பாறையிடை நீராவி குளிர்ச்சியடைந்து படிகங்களை உருவாக்குவதைக் கண்டறிந்தன.
  • புதனின் சுற்றுப்பாதையில், நட்சத்திரத்தின் 2.2 வானியல் அலகுகளுக்குள் (AU) படிக சிலிகேட்டுகள் மற்றும் சிலிக்கான் மோனாக்சைடு வாயு காணப்பட்டன.
  • இம்மாதிரிகள் ஆனது தூசி ஆவியாகத் தொடங்கி பின்னர் திட தாதுக்களாக மீண்டும் ஒடுங்குகின்ற பகுதியில் சுமார் 1,300 கெல்வின் வெப்பநிலை காணப் படுவதை உறுதிப்படுத்தின.
  • ஃபார்ஸ்டரைட் மற்றும் என்ஸ்டாடைட் போன்ற கனிமங்கள் பூமியில் காணப்படும் ஒரு பழமையான விண்கற்களில் காணப்பட்டவற்றுடன் பொருந்தின.
  • வட்டின் மேலெழும்பும் வளிமண்டலத்தில் உருவானப் படிகங்கள், ஆரம்பகாலத் திடப் பொருள் உருவாக்கத்தை உறுதிப்படுத்துகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்