TNPSC Thervupettagam

நம்பிக்கை வாக்கெடுப்பு - உச்ச நீதிமன்றம்

April 20 , 2020 1947 days 755 0
  • 22 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த பின்னர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தைக்  கேட்டுக் கொண்ட மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டனின் மார்ச் மாத உத்தரவை உச்ச நீதிமன்றம் ஆதரித்து உள்ளது.
  • இச்சோதனைக்கு அழைப்பு விடுக்கும் ஆளுநரின் அதிகாரமானது தேர்தல்களுக்குப் பிறகு உடனடியாக ஒரு மாநில அரசாங்கம் தொடங்கப்படுவதற்கு முன்பு மட்டும் அல்லாது அந்த சட்டமன்றத்தின் பதவிக் காலம் முழுவதும் தொடர்ந்து செயல்படக் கூடியதாகும்.
  • நம்பிக்கை வாக்கெடுப்பு முறையைச் செயல்படுத்தும் போது, ஆளுநர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்குச் சாதகமாக இருக்கக் கூடாது.
  • நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்பு, அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா குறித்த சபாநாயகரின் முடிவுக்காக ஆளுநர் காத்திருக்கத் தேவையில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்