PREVIOUS
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்கள்:
நரி சக்தி
பெண்கள் தங்களின் திறனை வளர்த்துக்கொள்ளவும் , முன்னேற்றம் காணவும் அரசாங்கம் தன் திட்டங்களின் மூலம் ஒத்துழைக்க வேண்டும். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சமூக மனப்பான்மை மற்றும் மனநிலையை மாற்றும் நோக்கத்திலும் , சவாலான சூழலில் பெண்கள் பங்கேற்பதை வெளிப்படுத்தும் விதத்திலும் இந்தக் கடல்வழிப் பயணம் அமையும்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்
இந்த பாய்மரக் கப்பற்பயணம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தாத புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களைப் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துகிறது.
இந்தியாவில் உருவாக்குவோம்
முழுவதும் இந்தியாவிலேயே கட்டப்பட்ட கப்பலில் உலகைச் சுற்றி வருவது , ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ (Make in India’) திட்டத்தினைப் பறைசாற்றும் விதமாக அமையும்.
வானிலை / பெருங்கடல் / அலை தரவு கண்காணிப்பு
இந்தக் குழுவானது தினசரி அடிப்படையில் வானிலை மற்றும் பெருங்கடல் தொடர்பான பல தரவுகளை அளிக்கும் . இத்தரவுகள் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் .
இக்குழு கடல் மாசுபடுவது குறித்த தரவுகளையும் அவ்வப்போது வழங்கும்.
சாகசப் பயணம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக அமையும் இந்தப் பயணத்தின்போது, இந்திய வம்சாவளியை சேர்ந்த மக்களை பல்வேறு துறைமுகங்களில் சந்தித்து கடற்படை பெண் அதிகாரிகள் உரையாடத் திட்டமிட்டுள்ளனர்.