நாகாலாந்தில் ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை நீக்குவது குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு
December 31 , 2021 1298 days 452 0
நாகாலாந்தில் விதிக்கப்பட்டுள்ள ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை ஆய்வு செய்வதற்கு ‘5 பேர் கொண்ட‘ குழு ஒன்றை அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
விவேக் ஜோஷி இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.
இவர் இந்தியத் தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் ஆவார்.
மேலும், இவர் 45 நாட்களுக்குள் இதற்கானப் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க உள்ளார்.
உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பியூஷ் கோயல் இதன் உறுப்பினர் செயலாளராக பணியாற்றுவார்.
நாகாலாந்தின் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமைக் காவல் இயக்குனர் மற்றும் அசாம் ரைபில்ஸ் படைப் பிரிவின் தலைமைக் காவல் இயக்குனர் ஆகியோர் இந்தக் குழுவின் இதர உறுப்பினர்களாகச் செயல்படுவர்.
ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் எனும் சட்டமானது, எவ்விதமான ஒரு முன்கூட்டிய பிடியாணை எதுவுமின்றி, எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், எவரையும் கைது செய்யவும் வேண்டி பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரமளிக்கிறது.
அந்தப் படையினர் ஒருவரைச் சுட்டுக் கொன்றாலும் அதிலிருந்து அவர்கள் தப்பித்துக் கொள்வதற்குமான போதுமான வாய்ப்பையும் இச்சட்டம் தருகிறது.