TNPSC Thervupettagam

நாகாலாந்து காபி திட்டம்

May 22 , 2026 11 days 66 0
  • நாகாலாந்தை உலகளாவிய சிறப்பு காபி மையமாக மாற்றுவதற்காக ₹175 கோடி மதிப்பிலான "நாகாலாந்தின் காபிகள்" திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது
  • இத்திட்டமானது மரம் வளர்ப்பு, பதப்படுத்துதல், வர்த்தக முத்திரையிடுதல், ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய குழும அடிப்படையிலான காபி மதிப்புச் சங்கிலி மேம்பாட்டு மாதிரியைப் பின்பற்றுகிறது.
  • அராபிகா காபிக்காக கோஹிமா மாவட்டத்தில் உள்ள துவோபெமா கிராமம் மற்றும் ரோபஸ்டா காபிக்காக நியுலாண்ட் மாவட்டத்தில் உள்ள கோட்டோவி கிராமம் என இரண்டு சோதனை காபி குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • காபி சுற்றுலா, பண்ணை தங்குமிடங்கள் மற்றும் சர்வதேச சந்தை மேம்பாட்டுடன் "பிராண்ட்/தர அடையாள வடகிழக்கு - நாகாலாந்தின் காபிகள்" என்ற முத்திரையை உருவாக்குவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் இயற்கை வேளாண்மை சான்றிதழ், புவிசார் குறியீடு (GI), டிஜிட்டல் மூலம் கண்டறியும் தன்மை மற்றும் காபி விவசாயிகளுக்கு அதிக வருமான வாய்ப்புகளை ஊக்குவிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்