TNPSC Thervupettagam

நாடாளுமன்றக் குழுக்கள் 2026-27

May 7 , 2026 3 days 85 0
  • 2026-27 ஆம் ஆண்டிற்கான நான்கு முக்கிய நாடாளுமன்றக் குழுக்களை மக்களவை சபாநாயகர் மாற்றியமைத்துள்ளார்.
  • பொதுக் கணக்குக் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு, மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக் குழு ஆகியவை அந்த நான்கு குழுக்களாகும்.
  • நாடாளுமன்றக் குழுக்கள் என்பது அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஆராயவும், நிர்வாகத்தின் பொறுப்புடைமையை உறுதி செய்யவும் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களாகும்.
  • நிலைக் குழுக்களானது, நிதிக் குழுக்கள் போன்ற நிரந்தர அமைப்புகள், துறைசார்ந்த நிலைக் குழுக்கள் மற்றும் குறிப்பிட்ட பணிகளுக்கான தற்காலிகக் குழுக்கள் ஆகியன இதன் வகைகளில் அடங்கும்.
  • மசோதாக்கள், கொள்கைகள், அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து இவை விரிவான ஆய்வை மேற்கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்