TNPSC Thervupettagam

பொது சுகாதாரப் புதுமைகளுக்கான தேசிய உச்சி மாநாடு

May 7 , 2026 3 days 76 0
  • பொது சுகாதாரத்தில் புதுமை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான 10வது தேசிய உச்சி மாநாட்டை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • சுகாதாரத்துறையில் உள்ள சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்துவதற்காக தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இந்த உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
  • ஸ்வஸ்த் பாரத் வலைத்தளம், ஜனனி டிஜிட்டல் தளம் மற்றும் RBSK 2.0 (குழந்தை சுகாதாரத்திற்கான ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய காரியக்ரம்) ஆகியவை தொடங்கப் பட்ட முக்கிய முன்னெடுப்புகளில் அடங்கும்.
  • ஸ்வஸ்த் பாரத் வலைத்தளம் என்பது சுகாதாரத் திட்டங்களைக் கண்காணிக்கவும், செயல்திறனை மதிப்பிடவும், முடிவெடுப்பதை மேம்படுத்தவுமான ஒரு டிஜிட்டல் தளம் ஆகும்.
  • ஜனனி டிஜிட்டல் தளமானது தாய் மற்றும் சேய் சுகாதார சேவைகளை ஆதரிக்கிறது என்பதோடு அது கர்ப்பங்களைக் கண்காணிப்பதை உறுதி செய்கிறது மற்றும் பாதுகாப்பான பிரசவங்களை ஊக்குவிக்கிறது.
  • 17வது பொது ஆய்வுக் குழு அறிக்கை என்பது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள சுகாதாரத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் செயல்திறன் குறித்த ஒரு மதிப்பீடாகும்.
  • ஒருங்கிணைந்த பயிற்சித் தொகுதி என்பது ஆரம்ப சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், சேவையின் தரத்தை மேம்படுத்தவும், ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவுமான ஒரு தரப்படுத்தப்பட்ட அமைப்பாகும்.
  • குழந்தை சுகாதாரப் பரிசோதனையை வலுப்படுத்தவும், நோய்களுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சையளிப்பதை உறுதி செய்யவும் மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய காரியக்ரம் 2.0 வழங்குகிறது.
  • அரசு சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் சிகிச்சைக்காக நோயாளிகள் தங்கள் கைக் காசைச் செலவழிக்கும் இடைநிலைச் செலவு பூஜ்யம் என்பதை இந்தியா எட்டியுள்ளது (நோயாளிகளுக்கு சராசரி செலவு இல்லை).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்