2026-27 ஆம் ஆண்டிற்கான நான்கு முக்கிய நாடாளுமன்றக் குழுக்களை மக்களவை சபாநாயகர் மாற்றியமைத்துள்ளார்.
பொதுக் கணக்குக் குழு, மதிப்பீட்டுக் குழு, பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு, மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக் குழு ஆகியவை அந்த நான்கு குழுக்களாகும்.
நாடாளுமன்றக் குழுக்கள் என்பது அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஆராயவும், நிர்வாகத்தின் பொறுப்புடைமையை உறுதி செய்யவும் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களாகும்.
நிலைக் குழுக்களானது, நிதிக் குழுக்கள் போன்ற நிரந்தர அமைப்புகள், துறைசார்ந்த நிலைக் குழுக்கள் மற்றும் குறிப்பிட்ட பணிகளுக்கான தற்காலிகக் குழுக்கள் ஆகியன இதன் வகைகளில் அடங்கும்.
மசோதாக்கள், கொள்கைகள், அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து இவை விரிவான ஆய்வை மேற்கொள்கின்றன.