TNPSC Thervupettagam

நாடு தழுவிய முட்டை பாதுகாப்பு குறித்த கண்காணிப்பு

December 19 , 2025 4 days 43 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) ஆனது நாடு தழுவிய முட்டை பாதுகாப்பு குறித்த நடவடிக்கையைத் தொடங்கியது.
  • பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தின் முட்டைகளில் நைட்ரோஃபுரான்கள் இருப்பதாக வந்த தகவல்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.
  • நைட்ரோஃபுரான்கள் என்பது முன்னதாக உணவு உற்பத்தி செய்யும் விலங்குகளில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட கால்நடை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் ஆகும்.
  • முட்டைகளில் நைட்ரோஃபுரான்களின் பதிவுகளைக் கண்டறிய FSSAI கண்காணிப்பு மற்றும் சோதனைகளை நடத்தி வருகிறது.
  • புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்து காரணமாக நைட்ரோஃபுரான்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
  • இந்த முயற்சி என்பது உணவுப் பாதுகாப்பையும் உணவுப் பாதுகாப்புச் சட்டங்களுடன் இணங்குவதையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்