இந்த ஆண்டின் செப்டம்பர் மாத இறுதியில் நாடு முழுவதும் உள்ள தானியங்கு பண வழங்கீட்டு இயந்திரங்களின் எண்ணிக்கை 2.13 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இவற்றில் 47 சதவீதத்திற்கும் மேலானவை கிராமப்புறம் மற்றும் பகுதியளவு நகரப் பகுதிகளில் உள்ளன.
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் 2,13,145 ஏ.டி.எம் இயந்திரங்களை நிறுவியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் கூறுகின்றன.
இத்துடன், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் 27,837 வங்கி சாரா ஏ.டி.எம் (White Label ATMs) இயந்திரங்களை நிறுவியுள்ளன.