நான்காவது நீர் தாக்க விளைவு உச்சி மாநாட்டை மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சரான கஜேந்திர சிங் செகாவத் புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
இந்த உச்சி மாநாடானது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நீர் வளங்களின் ஒருங்கிணைந்த மேலாண்மையின் மீது கவனம் செலுத்துகின்றது.
இந்த உச்சி மாநாடானது உலகளாவிய நிதியியல் முதலீட்டாளர்களையும் நிறுவனங்களையும் ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்தும் இரண்டாவது நீர் நிதியியல் மன்றத்தை நடத்த இருக்கின்றது.
இந்த உச்சி மாநாட்டின் போது, நதி மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த அறிக்கையானது மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தினால் வெளியிடப் பட்டது.