2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பகையா பட்டு, குச்சாய் பட்டு, முண்டா நகைகள் மற்றும் ஜார்க்கண்ட் மூங்கில் கைவினைப்பொருட்கள் ஆகிய நான்கு பாரம்பரியப் பொருட்களுக்கு ஜார்க்கண்ட் மாநிலம் புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளது.
பொருட்கள் புவிசார் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 1999-இன் கீழ் தனித்துவமான புவியியல் தோற்றம் மற்றும் பண்புகளைக் கொண்ட பொருட்களுக்குப் புவிசார் குறியீடானது அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பை வழங்குகிறது.
பகையா பட்டு என்பது கோடா மாவட்டத்தைச் சேர்ந்த காட்டு டஸ்ஸர் வகைப் பட்டாகும், குச்சாய் பட்டு என்பது செரைகேலா-கர்சவான் மாவட்டத்தைச் சேர்ந்த காடுகளை அடிப்படையாகக் கொண்ட டஸ்ஸர் பட்டாகும்.
முண்டா நகைகள் என்பது முண்டா பழங்குடி சமூகத்தின் பாரம்பரியக் கைவினைப் பொருளாகும் மற்றும் ஜார்க்கண்ட் மூங்கில் கைவினைப் பொருட்கள் சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதியில் கிடைக்கும் மூங்கிலைப் பயன்படுத்துகின்றன.