TNPSC Thervupettagam

நான்சி கிரேஸ் ரோமன் தொலைநோக்கி

September 2 , 2026 11 days 107 0
  • இருண்ட ஆற்றல், கரும்பொருள், ஈர்ப்பு மற்றும் சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள கோள்களை ஆய்வு செய்வதற்காக, அடுத்த தலைமுறை ஆய்வகமான நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்த நாசா தயாராகி வருகிறது.
  • நாசாவின் முதல் தலைமை வானியலாளர் நான்சி கிரேஸ் ரோமனின் பெயரால் இது அழைக்கப் படுகிறது, மேலும் இது ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மற்றும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஆகியவற்றைத் தொடர்ந்து வருகிறது.
  • இந்தத் தொலைநோக்கியானது புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திருந்து ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் ஹெவி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு இது பூமியிலிருந்து சுமார் 1.6 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள லாக்ராஞ்ச் புள்ளி 2-க்கு பயணிக்கும்.
  • இதன் முக்கிய ஆய்வு இரண்டு பில்லியன் விண்மீன் திரள்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பிரபஞ்ச கட்டமைப்புகளின் வளர்ச்சி மற்றும் பிரபஞ்சத்தின் விரிவாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்ய அறிவியலாளர்களுக்கு உதவும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்