TNPSC Thervupettagam

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்

December 3 , 2025 9 days 56 0
  • உலக சுகாதார அமைப்பானது, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) 2021 ஆம் ஆண்டில் 3.5 மில்லியன் இறப்புகள் பதிவாகும் என்பதுடன் உலகளவில் பதிவாகும் மரணத்திற்குகான நான்காவது முக்கிய காரணமாக அமையும் என்று கூறுகிறது.
  • நிரந்தர நுரையீரல் சேதத்தால் ஏற்படுகின்ற COPD ஆனது சுவாசிக்கும் செயல் முறையை கடினமாக்கக் கூடிய நுரையீரல் நோயாகும்.
  • இதில் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி (காற்றுப்பாதைகளின் வீக்கம்) மற்றும் எம்பிஸிமா (காற்றுப் பைகளுக்கு சேதம்) என்ற இரண்டு முக்கிய வகைகள் உள்ளன.
  • இந்தப் பாதிப்பிற்கான முக்கியமான காரணங்களில் புகைபிடித்தல், உட்புறக் காற்று மாசுபாடு, இரசாயனப் புகை அல்லது தூசி பாதிப்பு மற்றும் அரிய மரபணுக் கோளாறுகள் ஆகியவை அடங்கும்.
  • இதன் அறிகுறிகளில் சளியுடன் கூடிய இருமல், மூச்சுத் திணறல், மூச்சிரைப்பு, மார்பு இறுக்கம் மற்றும் அடிக்கடி ஏற்படும் தொற்றுகள் ஆகியவை அடங்கும்.
  • COPD ஆனது, கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் (11%) அதிக பாதிப்பு கொண்டு உள்ளதுடன் (5.6%) இந்தியாவில் 37.6 மில்லியன் மக்களைப் பாதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்