TNPSC Thervupettagam

நிதி ஆயோக்கின் 11வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம்

June 14 , 2026 15 hrs 0 min 103 0
  • நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் ஆனது பிரதமரின் தலைமையில் நடைபெற்றது.
  • இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பங்கேற்புடன் இந்தியாவின் நீண்டகால வளர்ச்சி தொலைநோக்குப் பார்வையான "விக்சித் பாரத் @2047" என்பதன் மீது இக்கூட்டம் கவனம் செலுத்தியது.
  • இக்கூட்டத்தின் கருத்துரு "Inclusive Human Development for Viksit Bharat @2047" என்பதாகும்; இது இந்தியா முழுவதும் சமநிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.
  • கொள்கை மற்றும் மேம்பாட்டுத் திட்டமிடலுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் கூட்டுறவுக் கூட்டாட்சியை இது ஊக்குவிக்கிறது.
  • பெண்கள் அதிகாரமளித்தல், வேளாண் சீர்திருத்தங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு, மற்றும் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை வலுப்படுத்துதல் ஆகியவை முக்கிய கவனத்துறைகளாக இருந்தன.
  • பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக விரைவான குறைதீர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்ப்பது ஆகியவற்றையும் இது வலியுறுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்