நிதி ஆயோக் அறிக்கை: இந்தியாவின் சுகாதாரத் துறையை மறுசீரமைத்தல்
February 13 , 2022 1405 days 604 0
நிதி ஆயோக் அமைப்பானது, இந்த அறிக்கையைச் சமீபத்தில் வெளியிட்டது.
நிதி ஆயோக் தனது அறிக்கையில், BRICS நாடுகளுள் இந்தியாவின் சுகாதாரத் துறைக்கான செலவுகள் மிகக் குறைவு என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 65 சதவீத அளவிலான மருத்துவமனைப் படுக்கைகள் ஆனது உத்தரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள கிட்டத்தட்ட 50 சதவீத மக்களுக்கான மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன என்று இந்த அறிக்கை எடுத்துக் கூறுகிறது.
மீதமுள்ள 21 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பிரதேசங்களில் வாழும் இந்தியாவின் மற்ற 50 சதவீத மக்கள் 35 சதவீத அளவிலான மருத்துவமனைப் படுக்கை வசதிகளைப் பயன்படுத்தச் செய்கின்றனர்.
படுக்கைகளின் எண்ணிக்கையைக் குறைந்தபட்சம் 30 சதவீதம் என்ற அளவிற்கு அதிகரிக்க வேண்டும் என்று இது குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மருத்துவமனைத் துறையானது மொத்த மருத்துவச் சந்தையில் 80 சதவீதத்தைக் கொண்டுள்ளது.