TNPSC Thervupettagam

நிதி ஆயோக் – ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம்

December 25 , 2021 1340 days 552 0
  • நிதி ஆயோக் மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்ட அமைப்பு ஆகியவை உணவுப் பட்டியலைப் பல்வகைப்படுத்தி விரிவுபடுத்திட ஒப்புக் கொண்டுள்ளன.
  • நிதி ஆயோக் மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்ட அமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டாண்மையானது சிறுதானியங்களின் பிரதான பயன்பாட்டில் கவனம் செலுத்தவும், சிந்தனைப் பரிமாற்றத்தில் சர்வதேச அளவில் இந்தியா முன்னிலை பெற்றிடவும் வேண்டி இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கும்.
  • 2023 ஆம் ஆண்டானது சர்வதேச சிறுதானிய ஆண்டாக அழைக்கப்படுகிறது.
  • மேலும் உணவு அமைப்புகளை மாற்றியமைப்பதுடன் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்தல் திறன் மற்றும் சிறு விவசாயிகளுக்கான நெகிழ்திறனுடன் கூடிய வாழ்வாதாரத்தை உருவாக்குதல் ஆகியவற்றை இக்கூட்டாண்மை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய அரசானது சிறுதானிய உற்பத்தியை ஊக்குவித்து மேம்படுத்துவதற்காக 2018 ஆம் ஆண்டினை சிறுதானியங்களின் ஆண்டாக அனுசரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்