புவியிடத் தகவல் முறைமை அடிப்படையில் தண்ணீர் வழங்கீட்டு அமைப்பு
December 25 , 2021 1340 days 441 0
இராணுவக் குடியிருப்புகளைச் சேர்ந்த குடிமக்களுக்காக புவியிடத் தகவல் முறைமை அடிப்படையிலான தண்ணீர் வழங்கீட்டு அமைப்பானது சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இந்த மாதிரியானது பாதுகாப்புச் செயலாளர் மற்றும் டெல்லியில் பாதுகாப்புத் துறையில் உள்ள சொத்துக்கள் பிரிவின் தலைமை இயக்குநர் ஆகியோரின் வழி காட்டுதலின் கீழ் பாஸ்கராச்சார்யா விண்வெளிப் பயன்பாட்டு மற்றும் புவியிடத் தகவல் கல்வி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தண்ணீர் வழங்கீட்டு இணைப்பிடத்தை அறிவதற்கு தனது குடிமக்களுக்கு உதவும் ஒரு தன்னியக்கமான அமைப்பாகும்.
இது அருகிலுள்ள தண்ணீர் குழாய் இணைப்பைத் தானாகவே நிர்ணயித்து தகவல் தெரிவிக்கிறது.
புவியிடத் தகவல் முறைமை சார்ந்த அமைப்பானது நாட்டில் முதல் முறையாக கையாளப் பட்டுள்ளது.
இது அரசின் குறைந்தபட்ச தலையீடு (minimum government) என்பதன் அடிப்படையில் ஆனதாகும்.
தண்ணீர்க் குழாய் இணைப்பிற்கான அனுமதி வழங்குவதற்கு எந்தவொரு மனிதத் தலையீடும் தேவையில்லை என்பதால் இது ‘அதிகபட்ச ஆளுமை’ என்ற கருத்திற்கு ஏற்ப இயங்குகிறது.