இந்தியாவின் நிலத்தடி நீர் நிலையை மதிப்பிடுவதற்காக ஜல் சக்தி அமைச்சகம் ஆனது 2025 ஆம் ஆண்டு மாறுநிலை நிலத்தடி நீர் வள மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது.
வருடாந்திர நிலத்தடி நீர் மீளேற்றம் ஆனது 448.52 பில்லியன் கன மீட்டராக (BCM) ஓரளவு அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் வருடாந்திர நீர் வெளியேற்றம் 247.22 BCM ஆக இருந்தது.
நிலத்தடி நீர் பிரித்தெடுக்கும் அளவு 60.63% ஆகும் என்பதோடு, இது கிடைக்கக்கூடிய மொத்த வளங்களில் உறிஞ்சப்படும் நீரின் விகிதத்தைக் காட்டுகிறது.
6,746 மதிப்பீட்டு அலகுகளில் (தொகுதிகள்/மண்டல்கள்/தாலுகாக்கள்), 73.4% பாதுகாப்பான நிலையிலும், 10.5% பகுதியளவு மோசமான நிலையிலும், 3.05% மோசமான நிலையிலும் மற்றும் 11.1% அதிகமாக சுரண்டப்பட்டவையாகவும் உள்ளன.
அதிகமாக சுரண்டப்படும் பகுதிகள் முக்கியமாக வடமேற்கு இந்தியா (பஞ்சாப், ஹரியானா, டெல்லி, மேற்கு உத்தரப் பிரதேசம்), மேற்கு இந்தியா (இராஜஸ்தான், குஜராத்) மற்றும் தென்னிந்தியா (கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம்) ஆகிய இடங்களில் உள்ளன.
1.8% பகுதிகள் நிலத்தடி நீர் சுத்திகரிப்பு இல்லாமல் குடிக்கவோ அல்லது பாசனத்திற்கு ஏற்றதாகவோ இல்லாத உப்புநீரைக் கொண்டதாக உள்ளன.