TNPSC Thervupettagam

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கான சிறப்பு அமர்வுகள்

July 21 , 2026 4 days 84 0
  • நீதித்துறை தேக்கத்தைக் குறைப்பதற்காகவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை பிரத்தியேகமாக விசாரிப்பதற்காகவும் இந்தியத் தலைமை நீதிபதி (CJI) சூர்ய காந்த் உச்ச நீதிமன்றத்தில் நான்கு சிறப்பு அமர்வுகளை அமைத்துள்ளார்.
  • நீதிபதி பி.கே. மிஸ்ரா மற்றும் நீதிபதி எஸ்.வி.என். பட்டி தலைமையிலான இரண்டு சிவில் அமர்வுகளானது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளில் கவனம் செலுத்தும், அதே நேரத்தில் நீதிபதி மனோஜ் மிஸ்ரா மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான இரண்டு குற்றவியல் அமர்வுகளானது பழைய குற்றவியல் வழக்குகளைக் கையாளும்.
  • பழைய வழக்குகளைத் தடையின்றி விசாரிப்பதை உறுதி செய்வதற்காக இந்த அமர்வுகள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் செயல்படும்.
  • சமீபத்திய ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் அதிகளவில் வழக்குகளைத் தீர்த்து வைத்தாலும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 90,000-ஐத் தாண்டி உள்ளதால், நிலுவையில் உள்ள வழக்குகளைக் கையாளும் நோக்கத்தைக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • மின்னணு-தாக்கல், மெய்நிகர் விசாரணைகள் மற்றும் நீதிமன்றங்களை எளிதில் அணுகக் கூடிய நிலை ஆகியவை புதிய வழக்குகளைப் பதிவு செய்வதில் அதிகரிப்பைக் கொண்டு வந்துள்ளதுடன் இது வழக்குகளை ஏற்பதற்கும் தீர்த்து வைப்பதற்கும் இடையே இடைவெளியை உருவாக்கியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்